பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் உக்ரைன் பொதுமக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் புடினுக்கு குடும்பம் இருக்கிறதா?
ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடின் உக்ரைனை ஊடுருவியுள்ள நிலையில், அவரது மகள்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்து எத்தனையோ தாய்மார்களை பிள்ளைகள் இல்லாதவர்களாக ஆக்கிவிட்ட புடினுக்கும் ஒரு குடும்பம் உள்ளது, பிள்ளைகள் இருக்கிறார்கள்...
தன் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என நினைக்கும் புடின் மற்றவர்களின் பிள்ளைகள் கொல்லப்படும்போது மட்டும் கண்டும் காணாமலும் இருக்கிறார்.
ஆனால், அவரது பிள்ளைகள் மீதும் தடைகள் விதிக்கவேண்டும் என்ற குரல் வலுவாகவே ஒலிக்கத் துவங்கியுள்ள நிலையில், தற்போது புடினுடைய மகள்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
புடின் பொதுவாக தனது குடும்பம் தொடர்பான கேள்விகளுக்கு விரிவாக பதிலளிப்பதில்லை. செய்தியாளர்கள் சந்திப்பில் அவரது குடும்பம் பற்றிய கேள்விகள் எழும்போது, தனது மகள்கள் ரஷ்யாவில் வசிக்கிறார்கள், ரஷ்யாவில் மட்டுமே படித்தார்கள், நான் அவர்களைப் பற்றி பெருமைப்படுகிறேன் என்று மட்டுமே அவர் கூறியுள்ளார்.
நான் யாரிடமும் என் குடும்பத்தைப் பற்றி விவாதிப்பதில்லை என்று கூறியுள்ள புடின், ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் வருங்காலத்திற்கான உரிமை உண்டு. அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள், அதை கண்ணியத்துடன் செய்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
புடின் தனது பிள்ளைகளின் பெயர்களைக் கூட வெளியிட விரும்புவதில்லை. ஆனால், அவர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது தொடர்பில் அவர்களது பெயர்கள் வெளியாகியுள்ளன.
புடினுக்கும் அவரது முன்னாள் மனைவியான Lyudmila Aleksandrovna Ocheretnayaவுக்கும் பிறந்த பிள்ளைகள் Maria Vorontsova (36) மற்றும் Katerina Tikhonova (35).
2013ஆம் ஆண்டு புடின் தன் மனைவியை பிரிந்தார். தம்பதியரின் மூத்த மகள் Maria 1985 இல் பிறந்தவர். அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் உயிரியலையும், மாஸ்கோ மாகாண பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தையும் பயின்றார். Maria தனது தந்தையை ஆதரிப்பதாகவும், மோதல் பற்றிய சர்வதேச அறிக்கைகள் மீது சந்தேகம் இருப்பதாக அவர் கருதுவதாகவும், உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு அவருடன் பேசியவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
புடினுடைய இரண்டாவது மகளான Katerina ஒரு சிறந்த ராக் அண்ட் ரோல் நடனக் கலைஞராக, அறியப்படுகிறார். புடினுடைய மகள்கள் இருவருமே திருமணமாகி தத்தம் கணவர்களைப் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
குழந்தைகள் முதுகில் ஈவிரக்கமில்லாமல் சூடு போட்ட படைவீரர்களைக் கொண்ட புடினுக்கு, பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
எனது பேரக்குழந்தைகளைப் பொருத்தவரை, அவர்கள் இளவரசர்களைப் போல வளர்வதை நான் விரும்பவில்லை. அவர்கள் சாதாரண மனிதர்களைப் போல வளர வேண்டும் என்றே நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளாராம் புடின்.
இப்படி பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்துமா உக்ரைனில் அப்பாவிப் பொதுமக்கள் மீது கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாமல் அவரது படைவீரர்கள் கொடூரத் தாக்குதல்களை நடத்துவதை பார்த்துக்கொண்டும் சும்மா இருக்கிறார் புடின்?