எந்த புகைப்படம் வெளியேவரக்கூடாது என மேகன் நினைத்தாரோ அதே புகைப்படத்தை வெளியிட்ட குடும்பத்தினர்
இவ்வளவு காலமாக எந்த புகைப்படம் வெளி உலகத்துக்குத் தெரியக்கூடாது என மேகன் நினைத்தாரோ, அதே புகைப்படத்தை வெளியிட்டு மேகனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளனர் மேகன் குடும்பத்தினர்.
தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள மேகன் குடும்பத்தினர்
எப்படி பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்து, ராஜ குடும்பத்தை அவமானப்படுத்தினார்களோ, அதேபோல, தற்போது மேகன் குடும்பத்தினர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர்.
அதில் மேகன் குறித்த பல விடயங்கள் வெளியாகும் என தெரிகிறது. உதாரணமாக, மேகனுடைய சகோதரியான சமந்தா, அப்பா மட்டும் இல்லையென்றால், இன்னமும் மேகன் ஹொட்டலில் உணவு பரிமாறுபவராகத்தான் இருந்திருப்பார் என கூறுவதைச் சொல்லலாம்.
இதுவரை வெளிவராத புகைப்படம்
அத்துடன், இதுவரை வெளிவராத பல புகைப்படங்களையும் மேகன் குடும்பத்தினர் வெளியிட இருக்கின்றனர். குறிப்பாக, தனது எந்த புகைப்படம் வெளியேவரக்கூடாது என மேகன் நினைத்தாரோ அதே புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் மேகன் குடும்பத்தினர்.
Image: tauerbach/Twitter
சமூக ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள அந்த புகைப்படத்தில், மேல் பொத்தான்கள் சரியாக போடப்படாத வெள்ளை சட்டை ஒன்றை அணிந்திருக்கும் மேகன், தலைமுடியை மோசமாக கட்டிவைத்துள்ளதைக் காணலாம்.
Image: ENT / SplashNews.com
சாப்பிடும்போது உணவு எதுவும் சட்டையில் படக்கூடாது என்பதற்காக அவர் டவல் ஒன்றை தன் மடியில் விரித்திருக்கும் விதம் சரியானதா அல்லது அது கீழ் மக்கள் நடந்துகொள்ளும் விதம் போல உள்ளதா என சமூக ஊடகங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
Image: Channel 7