அவர் மட்டும் இல்லையென்றால் மேகன் ஹொட்டலில்தான் வேலை செய்துகொண்டிருப்பார்: மேகனின் சகோதரி
இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகனுடைய குடும்பம், அவருக்கு எதிராக கைகோர்த்துள்ளது. மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு முந்தைய இரவு, மேகன் குறித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்று வெளியாக உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகன் ஹொட்டலில்தான் வேலை செய்துகொண்டிருப்பார்
அந்த பேட்டியில், மேகனுடைய குடும்பத்தினர் அவரைக் குறித்து இதுவரை வெளிவராத பல தகவல்களை வெளியிட இருக்கிறார்கள்.
Image: Channel 5
பேட்டியின் ஒரு பகுதியில், அப்பா மட்டும் இல்லையென்றால், மேகன் இன்னமும் ஹொட்டலில் உணவு பரிமாறுபவராகத்தான் வேலை செய்துகொண்டிருப்பார் என மேகனுடைய சகோதரியான சமந்தா கூறும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.
Image: FOX via Getty Images
பேட்டியில், மேகனைக் குறித்த பல வீடியோ காட்சிகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேகன் குறித்த அந்த பேட்டியைக் காண ஆர்வமாக இருப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்குப் பிறகு இந்த பேட்டியை வெளியிட்டிருக்கலாம். மன்னருடைய முக்கியமான நாளுக்கு முன் இந்த பேட்டி வெளியாவதால் அந்த நிகழ்ச்சி மீதான கவனம் திசைதிரும்பலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
Image: Getty Images