கனேடிய இளைஞரின் இறுதிச்சடங்குக்கு தயாரான குடும்பத்தினர்: பின்னர் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை
கனேடிய பெண் ஒருவரை தொடர்புகொண்ட பொலிசார், அவரது மகன் பொதுக்கழிப்பிடம் ஒன்றில் சடலமாகக் கிடப்பதாகக் கூறியதால், அந்த குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்
கனடாவின் New Brunswick மாகாணத்திலுள்ள Moncton நகரில் வாழ்ந்துவரும் Donna Price என்ற பெண்ணை கடந்த செவ்வாயன்று தொலைபேசியில் தொடர்புகொண்ட பொலிசார், அவரது 29 வயது மகன் பொதுக்கழிப்பிடம் ஒன்றில் இறந்துகிடப்பதாக தெரிவித்துள்ளனர்.
தான் காதில் கேட்ட செய்தியால் உறைந்துபோன Donna, அழுது கதறிய பின், சமாளித்துக்கொண்டு, தனது குடும்பத்தினர் அனைவருடனும் இந்த துயரச் செய்தியை பகிர்ந்துகொண்டுள்ளார்.
உறவினர்கள் அனைவரும் அந்த இளைஞரின் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளைத் துவங்கியுள்ளார்கள். பயணங்கள் திட்டமிடப்பட்டு அனைவரும் இறந்தவரின் வீட்டுக்கு புறப்பட்டுக்கொண்டிருக்கும்போது மற்றொரு செய்தி கிடைத்துள்ளது.
Submitted by Donna Price
இரண்டாவது அதிர்ச்சி
சில ஆவணங்களையும் நினைவுப்பொருட்களையும் எடுத்துவரும்படி தன் மகன் தங்கியிருந்த வீட்டுக்கு சில உறவினர்களை அனுப்பியுள்ளார் Donna.
அங்கு சென்ற அந்த நபர்கள், Donnaவின் மகன் அவருடைய படுக்கையறையில் உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள். உடனடியாக Donnaவை தொலைபேசியில் அழைத்த அவர்கள், அவருடைய மகன் உயிருடன் இருப்பதாகக் கூற, பத்து முறை அந்த செய்தி உண்மைதானா என கேட்டு உறுதிசெய்துகொண்டாராம் அவர்.
Shane Magee/CBC
திடீரென தனது வீட்டுக்கு உறவினர்கள் வந்ததை எதிர்பார்க்காத Donnaவின் மகனும், என்ன நடந்தது என விசாரிக்க, பொலிசார் தெரிவித்த செய்தி, மற்றும் அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு அவரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
குடும்பத்தாரின் அதிர்ச்சியும் கோபமும் பொலிசார் பக்கம் திரும்ப, தவறான செய்தியைத் தெரிவித்து தங்களைக் கலங்கடித்த பொலிசார் மீது வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளது Donnaவின் குடும்பம்.
நடந்தது என்னவென்றால், யாரோ ஒருவர் கழிப்பறையில் இறந்து கிடக்க, அது Donnaவின் மகன் என தவறாக அடையாளம் கண்டு அந்த செய்தியை அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்து குழப்பிவிட்டார்கள் பொலிசார்!