சுடுகாட்டில் புதைக்கப்பட்ட தந்தை உடல்! அது யாரோ ஒருவரின் சடலம் என 6 மாதம் கழித்து சொல்லும் குடும்பத்தார்
அமெரிக்காவில் 6 மாதத்திற்கு முன்னர் சுடுகாடு கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்ட நபர் தங்கள் தந்தை கிடையாது எனவும் அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை எனவும் குடும்பத்தார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து Spenser Tillman என்பவர் தனியார் கல்லறை தோட்ட நிர்வாகம் தங்களுக்கு £64 மில்லியன் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
64 வயதான Larry Tillman என்பவரின் உடல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பொண்டியக் பகுதியில் உள்ள சுடுகாடு கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதைக்கப்பட்டது Larryன் சடலமே கிடையாது எனவும், கல்லறை தோட்ட நிர்வாகம் இந்த விடயத்தில் பெரிய குளறுபடி செய்துவிட்டதாகவும் அவரின் மகன் Spenser மற்றும் குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து குறித்த கல்லறை தோட்டத்தின் நிர்வாகம் £64 மில்லியன் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நீதிமன்றத்தை அவர்கள் நாடியுள்ளனர். இது குறித்து Spenser கூறுகையில், நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன், சுடுகாட்டு கல்லறையில் புதைக்கப்பட்டது என் தந்தை கிடையாது, இது குறித்து நிர்வாகத்திடம் கூறினாலும் அவர்கள் காது கொடுத்து கேட்க மறுக்கின்றனர்.
நாங்கள் இறுதிச்சடங்கையே கூட நிறுத்த முயன்றோம், ஆனால் அவர்கள் அதை கேட்காமல் தங்கள் பணியை தவறாக செய்தனர். எங்கள் தந்தை எங்கு இருக்கிறார் என இந்த நிமிடம் வரை தெரியவில்லை என கூறி அதிரவைத்துள்ளார்.
இது தொடர்பில் உரிமை வாரியத்தின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. Spenserன் வழக்கறிஞர் கூறுகையில், இந்த விடயம் பணத்தை பற்றியது அல்ல! Spenser அவர் உடன் பிறந்தவர்கள் மற்றும் குடும்பத்தார் மன உளைச்சலை நினைத்து பாருங்கள்.
எங்களுக்கு கல்லறை நிர்வாகத்திடமிருந்து சரியான பதில் வரவில்லை என கூறியுள்ளார்.
இது குறித்து கல்லறை தோட்டத்தின் சார்பில் பேசிய அதன் வழக்கறிஞர், இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என கூறியுள்ளார்.