கோமாவில் இருந்து மீண்டு விட்டாரே என முன்னர் ஏற்பட்ட திருப்தி! தற்போது திடீரென கொரோனாவால் உயிரிழந்த தமிழக வீரர்
டேபிள் டென்னிஸ் ஜாம்பவானான தமிழக வீரர் சந்திரசேகரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் 80களின் கதாநாயகனாக ஜொலித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன்.
இவர் மூன்று முறை தேசிய சேம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். அதோடு சர்வதேச வீரர்களையும் உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் சந்திரசேகரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். முன்னர் அவர் வேறு உடல்நலப்பிரச்சினையால் கோமாவில் இருந்து மீண்டு வந்த நிலையில் பலரும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் அந்த நம்பிக்கை சுக்குநூறாக உடையும் விதமாக தற்போது கொரோனாவிற்கு பலியாகி உள்ளது, ஒட்டுமொத்த இந்திய டேபிள் டென்னிஸ் உலகத்திற்கும் சோகமான நாள் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.