நாங்கள் எங்கே செல்வது? கரண்ட் இல்லாததால் ஏடிஎம்-ல் தஞ்சம் அடைந்த குடும்பம்
தொடர் மின்வெட்டு காரணமாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஏடிஎம்-ல் தஞ்சம் அடைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஏடிஎம்-ல் தஞ்சம்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஜான்சி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது. அப்பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜான்சி பகுதியில் வசித்துவரும் ஜெயந்தி குஷ்வாஹா என்ற பெண் தனது மூன்று சிறுவர்களுடன் ஏடிஎம்-ல் தஞ்சம் அடைந்துள்ளார். அவர்களோடு இவரது மற்றொரு பெண்ணும் ஏடிஎம்-ல் இருக்கிறார்.
இவர்கள் மொத்த குடும்பத்துடன் ஏடிஎம்-ல் ஓய்வெடுக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் எங்கே செல்வது? இங்கே மின்சாரம் இருப்பதால் நாங்கள் இங்கே இருக்கிறோம். பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ள ஏடிஎம்-ல் இருக்கிறோம். மின்சாரத் துறையினரும் எந்த முறையான தகவலையும் கொடுப்பதில்லை. எங்களது குழந்தைகளை தெருவில் உறங்க வைக்க முடியாது. அதனால் தான் இங்கு இருக்கிறோம்" என்றார்.
இந்த வீடியோவுக்கு பயனர் ஒருவர் உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (UPPCL) ஊழல் மற்றும் திறமையற்றது என்று விமர்சித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |