பிரபல நடிகர் ஆர்யா நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்! காரணம் என்ன?
தமிழகத்தின் அம்பாசமுத்திரத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா இன்று ஆஜரான நிலையில் அவர் மீதான வழக்கு குறித்து முழுமையாக தெரியவந்துள்ளது.
பிரபல நடிகர்கள் ஆர்யா, விஷால் இணைந்து நடித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் ‘அவன் இவன்‘. இந்த படத்தை கல்பாத்தி அகோரம் தயாரிப்பில், இயக்குனர் பாலா இயக்கி இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், அம்பை, காரையாறு சுற்றுவட்டார பகுதியில் நடந்தது.
இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அவதூறாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் தீர்த்தபதிராஜா மகன் சங்கர் ஆத்மஜன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கானது சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் இதில் சம்மந்தப்பட்ட நடிகர் ஆர்யா இன்று அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.