உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்த பிரபல நடிகர்: பின்னணி
உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு சென்று சந்தித்துள்ளார்.
அவர் பிரபல நகைச்சுவை நடிகரான பென் ஸ்டில்லர் (Ben Stiller).
ஜெலன்ஸ்கியை பார்த்ததும், நீங்கள்தான் எனது ஹீரோ, உங்களை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய கௌரவம் என்று கூறினார்.
President Zelensky met Ben Stiller. pic.twitter.com/jp3Y7MLU71
— Fuat (@lilygrutcher) June 20, 2022
இந்த செய்தி ட்விட்டரில் வெளியானதும், இவர் எதற்காக ஜெலன்ஸ்கியை சந்தித்தார், இது ஒரு பெரிய விடயமா என்பது போல சிலர் கருத்துக்கள் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், பென், ஜெலன்ஸ்கியை சந்தித்தது வெறும் ஒரு நடிகராக மட்டும் அல்ல. அவர் United Nations High Commissioner for Refugees (UNHCR), அதாவது, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் நல்லெண்ணத் தூதுவர் ஆவார்.
நேற்று உலக அகதிகள் தினம் என்பதால், பென் உக்ரைன் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.
அத்துடன், உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கியே தன் வாழ்வை ஒரு நகைச்சுவை நடிகராகத்தான் துவங்கினார் என்பதும், அவர் நடித்த கதாபாத்திரம் ஒன்றின் வெற்றிதான் அவரது அரசியல் வாழ்க்கைக்கே அச்சாரமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.