அழகியல் அறுவை சிகிச்சைக்குப் பின் ஆளே மாறிப்போன நடிகை
The famous actors who now look very different after cosmetic surgery: பிரபல நடிகர்கள் சிலர், அழகியல் சிகிச்சைக்குப் பின் ஆளே மாறிப்போயிருக்கிறார்கள்.

குழந்தை பிறந்தபின் தன் உடலே மாறிப்போய்விட்டதாகக் கூறி, சமீபத்தில் அழகியல் சிகிச்சை செய்துகொண்டார் பிரபல நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ்.

ஆனால், அழகியல் சிகிச்சைக்குப் பிறகுதான் ஆளே மாறிப்போய்விட்டார் லாரன்ஸ். ஆம், அவரது முகமே மாறிவிட்டது!

அழகியல் சிகிச்சைக்குப் பின்னான ஜெனிஃபர் லாரன்ஸின் புகைப்படங்களைப் பார்க்கும்போது, அது அவர்தான் என்று கூறவே முடியவில்லை.
ஆளே மாறிப்போன பிரபலங்கள்
ஜெனிஃபர் லாரன்சைப்போலவே, அழகியல் சிகிச்சை செய்துகொண்டு ஆளே மாறிப்போன வேறு சில நடிகர்களும் இருக்கிறார்கள்.

குறிப்பாக, தி மாஸ்க் என்னும் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகரான ஜிம் கேரி, நீண்ட நாட்களுக்குப் பின் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டார்.

அவரைப் பார்த்தபின், இது ஜிம் கேரியே அல்ல, அவருக்கு ஏதோ ஆகிவிட்டது, இது ஜிம் கேரியின் க்ளோன் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. அந்த அளவுக்கு மாறிப்போயிருந்தது அவரது முகம்.

அதேபோல, எக்ஸ் ஃபேக்டர் புகழ் சைமன் கவலுடைய முகமும், அழகியல் சிகிச்சைக்குப் பின் மாறிவிட்டது.