பண்டிகை கொண்டாட்டத்தால் கொரோனாவின் நான்காவது அலையில் சிக்கிய பிரபல நாடு!
பாரசீக புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு, ஈரான் இப்போது கொரோனா வைரஸின் நான்காவது அலையின் பாதிப்புகளை எதிர்கொள்கிறது.
ஈரானில் இந்த ஆண்டு மார்ச் 20-ஆம் திகதி Nowruz எனப்படும் பாரசீக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதற்கான விடுமுறை நாட்களில் மில்லியன் கணக்கான மக்கள் நாட்டிற்கு வெளியேயும் உள்ளேயும் பயணம் செய்தனர்.
இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை முன்பு இருந்ததை விட, கடந்த வாரத்தில் பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், 32 மாகாணங்களைகே கொண்ட ஈரானில், Alborz மற்றும் Ilam ஆகிய இரண்டு மாகாணங்கள் கொரோனா வைரஸின் நான்காவது அலையால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மேலும் 7 மாகாணங்கள் கொடுந்தொற்றின் நான்காவது அலையின் கட்டத்திற்குள் நுழைவதற்கான விளிம்பில் உள்ளன என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், ஈரானின் ஜனாதிபதி Hassan Rouhani, ஒரு மோசமான சூழ்நிலைக்கு எதிற்கொள்ள நாட்டு மக்களை எச்சரித்துள்ளார், மேலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.
சுமார் 85 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், உலகில் கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து 1.9 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மொத்தம் 63,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Nowruz கொண்டாட்ட காலத்தில், ஈரானியர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அழகிய இடங்களுக்குச் செல்லும் பாரம்பரியத்தை பின்பற்றினர், இது தொற்றுநோய்களின் எழுச்சிக்கு காரணமாக மாறியுள்ளது.