பிரபல ஹாலிவுட் நடிகை ‘சிறு விபத்தில்’ மரணம்
பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர், அவரது வீட்டுக்கு அருகில் நிகழ்ந்த சிறு விபத்தொன்றில் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
பிரபல ஹாலிவுட் நடிகை
பிரபல ஹாலிவுட் நடிகையான Anne Whitfield, தனது 85ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். ஆன், அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ள தனது வீட்டின் அருகே வாக்கிங் சென்றுகொண்டிருக்கும்போது, சிறு விபத்தொன்று நிகழ்ந்ததாகவும், மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலும், அவரது உயிர் பிரிந்துவிட்டதாகவும், என்றாலும் அவருக்கு பிரியாவிடை அளிக்கும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்ததாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
திறமையிருந்தும் ஜொலிக்காத நடிகை
1954ஆம் ஆண்டு ஆன் நடித்த White Christmas என்னும் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றாலும், ஏனோ அதற்குப் பிறகு அவருக்கு சரியான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
1980, 90களில் சிறு வேடங்களில் நடித்த ஆன், பிறகு தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். ஒரு கட்டத்தில், இனி திரைத்துறையே வேண்டாம் என முடிவு செய்து வாஷிங்டனில் குடியேறிய ஆன், பட்டப்படிப்பு முடித்து, அரசுத்துறை ஒன்றில் பணியில் சேர்ந்துள்ளார்.
பின்னர் சமூக சேவையில் இறங்கிய ஆன், தனது உயிர் பிரியும் வரை ஒரு சமூக ஆர்வலராகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
Anne Whitfield RIP pic.twitter.com/3L1rU5q0ZH
— Carlo Alberto Galluzzo (@CarloAlbertoG) March 1, 2024
RIP to Anne Whitfield
— Katie K. (@toujours_katie) February 29, 2024
Fun Fact - Though best known for White Christmas; Whitfield also appeared in a few old TV shows. In the un-aired (till the 90’s at-least) pilot for That Girl Ann (Marlo Thomas), had a group of friends which Whitfield was one. pic.twitter.com/8yFkLVFPdB
This will hit anyone who loves "White Christmas" (and I certainly am one of those people) right in the heart: #AnneWhitfield, who played the grandddauughter of the retired major general turned inn operator (Dean Jagger), has passed. pic.twitter.com/oClTSIWeNv
— Jay Bobbin (@JayBobbin1) February 29, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |