அதிமுக-திமுக கூட்டணியிலிருந்து விலகி புதுக்கூட்டணி அமைத்த பிரபல கட்சிகள்! வெளியான முக்கிய அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகிவிட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று திமுக கூட்டணியில் இருந்து பச்சை முத்துவின் இந்திய ஜனநாயக கட்சியும் வெளியேறிவிட்டது.
சமத்துவ மக்கள கட்சி-இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் ஒருமாத காலமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவமக்கள் கட்சி விலிகிவிட்டதாகவும், சட்டமன்ற தேர்தலை இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும், தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் இந்த கூட்டணி பாடுபடும் எனவும் அவர் கூறியுள்ளார்.