ஒரே நாளில் தாயையும் சகோதரியையும் இழந்த பிரபல பாடகி
உலகம் முழுவதும் தனது பாடல்களால் புகழ் பெற்றவரான பிரபல அமெரிக்கப் பாடகி ஒருவர், தன் தாயையும், சகோதரியையும் கடந்த வாரத்தில், ஒரே நாளில் இழந்ததாக தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் தாயையும் சகோதரியையும் இழந்த பிரபல பாடகி
மரியா கேரி, பிரபல பாடகி, பாடலாசிரியர் மற்றும் நடிகை என பன்முகத்திறன் கொண்டவராவார். உலகம் முழுவதும் அவரது பாடல்கள் கொண்டாடப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த வாரம் தனது தாய் மரணமடைந்ததாக தெரிவித்த மரியா, அதே நாளில், தான் தன் சகோதரியையும் இழந்ததாக தெரிவித்துள்ளார்.
என்றாலும், தன் தாயின் கடைசி நாட்களில் அவருடன் செலவிடும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததாகவும் மரியா தெரிவித்துள்ளார்.
மரியாவின் தாயாகிய Patricia (87), ஒரு ஓபரா பாடகியாவார். Patricia மற்றும் மரியாவின் சகோதரியான Alison (63) ஆகியோரின் மரணத்துக்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |