மைதானத்தில் ரொனால்டோவை கட்டியணைத்து தூக்கிய ரசிகர்! வைரல் வீடியோ
போர்த்துக்கல் மற்றும் போஸ்னியா அணிகளுக்கு இடையேயான போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரசிகர் ஒருவர் கட்டியணைத்து தூக்கிய நிகழ்வு நடந்தது.
போர்த்துக்கல் வெற்றி
யூரோ தகுதிச்சுற்று போட்டியில் போஸ்னியா அண்ட் ஹெர்ஸிகோவினா அணியை எதிர்கொண்ட போர்த்துக்கல் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ரொனால்டோவின் கோல் ஆப்சைடு ஆன நிலையில், புருனோ பெர்னாண்டஸ் இரண்டு கோல்களும் (77, 90+3), பெர்னாண்டோ சில்வா (44) ஒரு கோலும் அடித்தனர்.
இந்தப் போட்டியின்போது ரசிகர் போர்ச்சுக்கல் கொடியுடன் மைதானத்தில் நுழைந்து ரொனால்டோவின் காலில் விழுந்தார். பின்னர் சற்றும் எதிர்பாராத விதமாக ரொனால்டோவை கட்டிப்பிடித்து மேலே தூக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
RONALDO LIFTED UP BY FAN ?? Pitch invader during Portugal-Bosnia & Herzegovina match in Lisbon hugs 38-year-old striker before picking him up and hitting Siu cele. When they say you should never meet your heroes, it is often for your hero's own safety.pic.twitter.com/TaDjdmoTkx
— Men in Blazers (@MenInBlazers) June 17, 2023
பாதுகாவலர்கள் அவரை பிடிக்க வந்தபோது அவர்களிடம் இருந்து விலக விரைவாக வெளியேறினார். இந்த நிகழ்வை கண்ட பிற ரசிகர்கள் உற்சாகமிகுதியில் கூச்சலிட்டனர்.
GOAL
நன்றி கூறிய ரொனால்டோ
வெற்றிக்கு பின்னர் ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'அணியின் அபார வெற்றி! ஆதரவு அளித்த அனைத்து போர்த்துக்கீசிய மக்களுக்கும் நன்றி!' என என தெரிவித்தார்.
இதற்கிடையில் ரொனால்டோவை கட்டித் தூக்கிய ரசிகர் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |