மெஸ்ஸியை நோக்கி திடீரென ஓடி வந்த ரசிகர்! பின்னர் நடந்த சம்பவம்..பரபரப்பு வீடியோ
பாயர்ன் முனிச் அணிக்கு எதிரான போட்டியின் முடிவில், ரசிகர் ஒருவர் மெஸ்ஸியை நோக்கி ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் தோல்வி
PSG அணி 0-2 என்ற கோல் கணக்கில் பாயர்ன் முனிச் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் பாயர்ன் முனிச் அணி சாம்பியன்ஸ் லீக்கில் கால் இறுதிக்கு முன்னேறியது.
போட்டி முடிந்த பின் மெஸ்ஸி ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது, ரசிகர் ஒருவர் அவரை நோக்கி ஓடி வந்தார். அவர் மெஸ்ஸியை நெருங்கிய கணம் கால் வழுக்கி கீழே விழுந்தார். இதனால் ஒரு நொடியில் மெஸ்ஸி பதறினார்.
Messi initially automatically reaching to give the fan the hug that they want…..even in times like this. #Messi #ChampionsLeague #King pic.twitter.com/3I8Yyuewkb
— Musicmaniac (@Freezeezy_7) March 9, 2023
ரசிகரை மடக்கிய அதிகாரிகள்
உடனடியாக அங்கு விரைந்து பாதுகாவலர்கள், பாய்ந்து வந்து குறித்த ரசிகரை மடக்கிப் பிடித்தனர். எனினும் மெஸ்ஸியின் கவனத்தை ஈர்க்க அந்த ரசிகர் கத்தினார். ஆனால், அவரை கண்டுகொள்ளாமல் தனது அறைக்கு சென்ற மெஸ்ஸி, இடையில் ஒரு நொடி அவரை திரும்பிப் பார்த்தார்.
@IMAGO/Ulrich Wagner
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தை வைரலாகியுள்ளது. சாம்பியன்ஸ் லீக்கில் இருந்து மெஸ்ஸி தொடர்ந்து மூன்று சீசன்களில் 16வது சுற்றில் வெளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@Getty
@IMAGO/Sportimage/Jonathan Moscrop