ஹர்திக் பாண்டியாவை சந்திக்க 2,400 கி.மீ தூரம் நடந்த ரசிகர்; வீடு வழங்குவதாக உறுதி
fan walks 2400 km to meet hardik pandya he assure house and flight ticket: ஹர்திக் பாண்டியாவை சந்திக்க 2,400 கி.மீ. தூரம் நடந்து வந்த ரசிகர் திரும்ப செல்ல விமான டிக்கெட் வழங்கியதுடன் வீடு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவை சந்திக்க 2,400 கி.மீ. தூரம் நடந்த ரசிகர்
மஹாராஷ்டிராவை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா, 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அணித்தலைவராக உள்ளார்.

காயம் காரணமாக தற்போது அணியில் இடம் பிடிக்காத நிலையில், பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்தார்.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவின் தீவிர ரசிகர் ஒருவர் 2,400 கி.மீ. தூரம் நடைபயணம் செய்து அவரை வந்து சந்தித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ரவி குமார் ராவத், ஹர்திக் பாண்டியாவின் தீவிர ரசிகர் ஆவார். சிறு வயதிலே பெற்றோரை இழந்த அவர், திருமணமான தனது மூத்த சகோதரருடன் வசித்து வருகிறார்.
சிறு வயதில் செல்போன் இல்லாத காலத்தில் ஹர்திக் பாண்டியா விளையாடும் போட்டிகளை காண மற்றவர்களிடம் கெஞ்சி செல்போன் வாங்கி பார்ப்பாராம். அதன் பிறகு, இதற்காகவே வேலைக்கு சென்று சம்பாதித்து ஒரு செல்போனை வாங்கியுள்ளார்.

ஹர்திக் பாண்டியாவை நேரில் சந்திக்க விரும்பிய அவர், லக்னோவிலிருந்து 1,400 கிமீ நடந்தே மும்பைக்கு சென்றுள்ளார்.
ஆனால், சில நாட்களுக்கு முன்பு தான் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா பெங்களூருக்கு குடிபெயந்துள்ளார்.
ஆனால், மனம் தளராத ரவி குமார் ராவத், மும்பையிலிருந்து மேலும் 900 கிமீ நடந்து பெங்களூரு சென்று ஹர்திக் பாண்டியாவை சந்தித்துள்ளார்.
வீடு வழங்குவதாக உறுதி
அங்கு, பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மைதானம் முன்பு ரவி குமார் ராவத்தை ஹர்திக் பாண்டியா கட்டியணைத்து வரவேற்றார்.

மேலும், உனக்கு ஏதாவது தேவை இருந்தால் என்னிடம் கேள் என கூறிய அவர், தனது மேலாளரிடம் இவர் திரும்பி செல்வதற்கு விமான டிக்கெட் ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் வாடகை வீட்டில் வசித்து வருவதாக கூறிய நிலையில், அவருக்கு வீடு வழங்க ஏற்பாடு செய்வதாக ஹர்திக் பாண்டியா உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியாவை சந்தித்த வீடியோவை ரவி குமார் ராவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய நிலையில், அந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
அதேவேளையில், ஹர்திக் பாண்டிய வழங்கிய டிக்கெட்டை தொலைத்து விட்டதாக கூறும் அந்த நபர், ரயில் நிலையம் முன்பு அமர்ந்து பண உதவி செய்யுமாறு QR கோடு உடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.