விண்வெளிக்கு செல்லும் ஆறு பெண்கள்: பிரபல பாடகி தொடர்பில் கேள்வி ஒன்றைக் கேட்கும் இணையம்
இன்று இரவு, முதன்முறையாக பெண்கள் மட்டுமே பயணிக்கும் ராக்கெட் ஒன்று விண்வெளிக்குச் செல்ல இருக்கும் நிலையில், அதில் பயணிக்கும் ஆறு பெண் பிரபலங்கள் வரலாற்றில் இடம்பெற இருக்கிறார்கள்.
யார் யார் விண்வெளிக்குச் செல்கிறார்கள்?
Thrilled for Katy Perry, Lauren Sánchez, Gayle King, Amanda Nguyen, Aisha Bowe, and Kerianne Flynn soaring to space on Blue Origin’s NS-31! First all-female crew since ‘63, launching 9:30 a.m. Monday from West Texas. Who’s ready to join the stars? ❤️🚀 pic.twitter.com/0WSUnIiHR9
— Marc Benioff (@Benioff) April 14, 2025
பொப்பிசைப் பாடகி கேற்றி பெரி, உலக கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸின் காதலியும், எழுத்தாளருமான லாரன் சான்ச்சேஸ், ஊடகவியலாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான கெய்ல் கிங், சமூக ஆர்வலரான அமன்டா (Amanda Nguyen), முன்னாள் ரொக்கெட் அறிவியலாளரான ஆய்ஷா (Aisha Bowe) மற்றும் திரைப்படத்துறையைச் சேர்ந்த கெரியேன் (Kerianne Flynn) ஆகியோர்தான் விண்வெளிக்குச் செல்லும் பெண்கள்.
அமேசான் நிறுவனரான கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் (Blue Origin) என்னும் ராக்கெட்டில் இவர்கள் ஆறு பேரும் விண்வெளிக்குச் செல்ல இருக்கிறார்கள்.
Katy Perry shares new video ahead of her voyage into space tomorrow.
— Pop Crave (@PopCrave) April 13, 2025
She reveals that the capsule on which she’s traveling has an outline of a feather, and is named Tortoise — two nicknames her mom calls her. pic.twitter.com/5QVKSwugbp
அவர்கள் ஆறு பேரும் விண்வெளிக்குச் செல்கிறார்கள் என்றாலும், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸைப் போல விண்வெளி மையத்துக்குச் செல்லவில்லை அவர்கள்.
வெறும் 10 முதல் 11 நிமிடங்கள் மட்டுமே விண்வெளியில் செலவிடவிருக்கும் அவர்களுடைய ராக்கெட், உடனடியாக மீண்டும் பூமிக்குத் திரும்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேற்றி பெர்ரியிடம் கேள்வி ஒன்றைக் கேட்கும் இணையம்
இந்நிலையில், அந்த ராக்கெட்டில் விண்வெளிக்குச் செல்லும் பிரபல பாடகியான கேற்றி பெர்ரியிடம் கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளார்கள் இணையவாசிகள்.
🚀 Katy Perry is on the final countdown to becoming the first pop star in outer space! Is she going to sing "Dark Horse" among the stars? 🌟 #KatyPerry #SpaceBound #QueenOfTheGalaxy pic.twitter.com/3lv9nqz1q9
— 鲁小鲁RuRu (@RuRu1281377) April 14, 2025
ஆம், விண்வெளிக்குச் செல்லும் கேற்றி பெர்ரி, விண்வெளியில் பாடல் ஒன்றைப் பாடுவாரா, குறிப்பாக, அவரது ’Dark Horse’ என்னும் பாடலை, நட்சத்திரங்களுக்கு நடுவே அவர் பாடுவாரா என அவரது ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்கள் வாயிலாக கேட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |