என்கிட்ட வேணாம் டீம் கிட்ட குடுங்க! மெஸ்சியின் நெகிழ்ச்சி செயல்..முதல் கோப்பையை வென்ற வீடியோ வைரல்
இன்டர் மியாமி அணி லீக்ஸ் கோப்பையை வென்ற பின், மெஸ்சியின் செய்த நெகிழ்ச்சி செயல் வைரலாகியுள்ளது.
இன்டர் மியாமி சாம்பியன்
லீக்ஸ் கோப்பையின் இறுதிப்போட்டி Geodis Park மைதானத்தில் நடந்தது. இன்டர் மியாமி - நாஷ்வில்லே அணிகள் மோதிய இந்தப் போட்டி 1-1 என சமநிலையில் முடிந்தது.
இன்டர் மியாமியின் மெஸ்சி ஒரு கோலும், நாஷ்வில்லேவின் ஃபாஃபா பிக்கல்ட் ஒரு கோலும் அடித்தனர்.
போட்டி சமநிலையானதால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இன்டர் மியாமி 10-9 என நாஷ்வில்லேவை வீழ்த்தியது.
Este equipo ?? pic.twitter.com/cXrFCf2fPc
— Inter Miami CF (@InterMiamiCF) August 20, 2023
(X)
மெஸ்சியின் செயல்
இதன்மூலம் முதல் முறையாக இன்டர் மியாமி லீக்ஸ் கோப்பையை வென்றது. போட்டி முடிந்ததும் மெஸ்சியின் கோப்பை வழங்கப்பட்டபோது, என் டீமிடம் கொடுங்கள் எனக் கூறி மேடையேறினார்.
(Business Middle East - Abu Dhabi)
அங்கு கோப்பையை சக அணி வீரர்களிடம் அளித்துவிட்டு உற்சாகமாக துள்ளிக் குதித்து மகிழ்ந்தார். மெஸ்சியின் இந்த செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து, இதுதொடர்பான வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
Chandan Khanna/AFP
Alan Poizner-USA TODAY Sports
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |