நடிகர் ரஜினிகாந்த் முடிவிற்கு எதிர்ப்பு! போயஸ் வீட்டிற்கு முன் ரசிகர்கள் செய்த செயல்
நடிகர் ரஜினி அரசியல் விலகல் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் அவரது போயஸ்கார்டன் வீட்டிற்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என டிசம்பர் 3ம் தேதி, ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த, இன்று அரசியலுக்கு வரவில்லை என அறிக்கை விட்டு ரசிர்களை கலக்கத்தில் ஆழ்த்தினார்.
தனது இந்த முடிவிற்கு உடல்நிலையே காரணம் என குறிப்பிட்ட நடிகர் ரஜினி, இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேசமயம், திருச்சியில் ரசிகர் ஒருவர் ரஜினியின் பேனரை எரித்து தனது அதிப்தியை வெளிப்படுத்தினார்.
