நியூசிலாந்து விமான நிலையத்தில் கோஹ்லிக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல்: ரசிகர்களின் நெகிழ்ச்சி செயல்
Fans sing birthday song for kohli in wellington: வெலிங்டன் விமான நிலையத்தில் ரசிகர்களை பிறந்தநாள் வாழ்த்துக் கூறி கோஹ்லியை வரவேற்றனர்.
நியூசிலாந்தின் வெலிங்டன் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த விராட் கோஹ்லிக்கு, குழுமியிருந்த ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து பாடலைப் பாடி வரவேற்றனர்.
38வது பிறந்தநாள்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோஹ்லி தனது 38வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
#WATCH | Wellington, New Zealand: Fans of star cricketer Virat Kohli gather at the airport, singing and wishing him on his 38th birthday. The second ODI between India and New Zealand is scheduled to be played on Saturday, November 7, at Hnry Stadium in Wellington. India leads the five-match series 1-0.
— ANI (@ANI) November 5, 2026
நியூசிலாந்தில் விளையாடி வரும் விராட் கோஹ்லி (Virat Kohli) இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட வெலிங்டனுக்கு சக அணி வீரர்களுடன் விமானம் மூலம் வந்தடைந்தார்.
அப்போது விமான நிலையத்தில் குழுமியிருந்த ரசிகர்கள், கோஹ்லி வந்ததும் ஒன்றாக "Happy Birthday dear Kohli..." என்று பாடல் பாடி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
200 சதவீத ஆற்றல்
அதேபோல் பெங்களூருவில் கோஹ்லியின் ரசிகர்கள் சிலர், RCB அணி இருமுறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்ததற்கு காரணமாக இருந்த அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட விடயங்களை பகிர்ந்துகொண்டனர்.
1️⃣9️⃣ years in, Bengaluru doesn’t just cheer for Virat Kohli. It learns from him. 🫶 On his birthday, we ask the people of Bengaluru what's the biggest thing they've learnt from the GOAT, on @bigbasket_com presents RCB 12th Man TV. 🥹📽️ #PlayBold #ನಮ್ಮRCB https://t.co/rESeZfBD74
— Royal Challengers Bengaluru (@RCBTweets) November 5, 2026
சிறிய வெள்ளைப் பலகையில் "ஒரு போதும் விட்டுக்கொடுக்காதே", "200 சதவீத ஆற்றல்", "எதிரணிக்கு சவால் டு விடுக்கத் துணிந்தால், அவர்களிடம் இருந்து வரும் சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்" போன்ற வாசகங்களை கோஹ்லியின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டு அவர்கள் எழுதினர்.
