பெனால்டி ஷூட்டில் வென்ற இந்திய அணி! ஒருமித்த குரலில் ஒலித்த 'வந்தே மாதரம்' - வைரல் வீடியோ
தெற்காசிய கால்பந்து கோப்பையை இந்திய அணி வென்றவுடன் ரசிகர்கள் எழுந்து நின்று 'வந்தே மாதரம்' பாடல் பாடியது நெகிழ்ச்சியடைய செய்தது.
பெனால்டிஷூட் அவுட்டில் வெற்றி
பெங்களூருவில் நேற்று நடந்த தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டி 1-1 என சமநிலையில் முடிந்தது. இந்திய வீரர் ஷபிப் அல் கால்டி ஒரு கோலும் (14), லல்லியன்ஜூலா சஹன்ட் ஒரு கோலும் (38) அடித்தனர்.
The Bengluru crowd was electrifying - what a beautiful moment in the SAFF Final. pic.twitter.com/mKzvCNNTy5
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2023
அதன் பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே பெனால்டிஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் இந்திய அணி 5-4 என்ற கணக்கில் மிரட்டல் வெற்றி பெற்றது. 5-4 என இருந்தபோது குவைத் கேப்டன் கலீத் ஹிஜையா அடித்த பந்தை, இந்திய கோல் கீப்பர் குர்மீத் சந்து அபாரமாக தடுத்ததன் மூலம் இந்தியா வெற்றி பெற்றது.
PTI
மைதானத்தில் ஒலித்த வந்தே மாதரம்
இதன்மூலம் 9வது முறையாக இந்திய அணி தெற்காசிய கால்பந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மேலும் 50 ஆயிரம் டொலர்கள் பரிசாக அணிக்கு கிடைத்தது.
இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றவுடன், மைதானத்தில் இருந்த 26 ஆயிரம் ரசிகர்களும் ஒருமித்த குரலில் எழுந்து நின்று ''வந்தே மாதரம்'' பாடலை பாடினர்.
இந்த தருணம் நெகிழ வீரர்கள் அனைவரையும் வைத்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
AIFF
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |