க்ருணால் பாண்டியாவை நோக்கி காலணியை வீசிய ரசிகர்கள்
fans throw shoe on krunal pandya after smat match: SMAT போட்டிக்கு பின்னர், மைதானத்திலிருந்த க்ருணால் பாண்டியாவை நோக்கி ரசிகர்கள் காலணியை வீசியுள்ளனர்.
க்ருணால் பாண்டியாவை நோக்கி காலணி வீச்சு
இந்திய கிரிக்கெட் வீரர் க்ருணால் பாண்டியா, சையத் முஸ்தாக் அலி தொடரில்(SMAT) பரோடா அணிக்காக விளையாடி வருகிறார்.

சையத் முஸ்தாக் அலி தொடரின் போட்டிக்கு பின்னர், மைதானத்திலிருந்த ரசிகர்களுக்கு கையெழுத்திட க்ருணால் பாண்டியா எல்லை கோட்டிற்கு அருகே சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக காலணி ஒன்று அவரை நோக்கி வீசப்பட்டது. காலணி மேலே படாமல் தப்பிய க்ருணால் பாண்டியா ரசிகர்களை எச்சரிக்கும் நோக்கில் சைகை செய்தார்.
Someone 𝗧𝗵𝗿𝗲𝘄 𝗦𝗵𝗼𝗲𝘀 at Krunal Pandya 😭😭 After the SMAT match, Krunal Pandya was heading towards the fans to give autographs when suddenly, a fan threw his shoes at him. Krunal narrowly escaped getting hit and warned the fan not to repeat such behaviour. Later, he even signed an autograph inside a fan's jacket cap. 😂
— Mukku (@Cric_Mukku) November 25, 2026
இருப்பினும் எல்லை கோட்டை தாண்டி சென்று ரசிகர்கள் வழங்கிய காகிதத்திலும், டிஷர்ட்டிலும் கையெழுத்திட்டார்.
சில ரசிகர்கள் முன்னோக்கித் தள்ளத் தொடங்கியபோது ஒரு குழந்தை தடுப்பின் மீது அழுத்தப்பட்டது. இதனை கவனித்த க்ருணால் பாண்டியா, அழுத்தத்தைக் குறைக்குமாறு ரசிகர்களை வலியுறுத்தினார்.
க்ருணால் பாண்டியாவை நோக்கி ரசிகர்கள் காலணி வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒரு கிரிக்கெட் வீரரை நோக்கி இது போன்ற செயல்களில் ஈடுபவது தவறானது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.