போலந்து நாட்டில் கொடூர துப்பாக்கிச் சூடு: தாக்குதல்தாரியின் வீட்டில் 3 உடல்கள் மீட்பு
Krakow rampage far right gunman killed 6 people: போலந்து நாட்டில் தீவிர வலதுசாரி ஆதரவாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரித்தானியர் ஒருவர் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
போலந்து நாட்டில் வெறித்தனமான துப்பாக்கிச் சூடு
சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் போலந்து நாட்டின் கிராகோவ்(Krakow) நகரின் முதன்மை சதுக்கத்தில் 25 வயதுடைய தீவிர வலதுசாரி நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரித்தானிய குடிமகன் உட்பட 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது தாக்குதல்தாரி இராணுவ சீருடை மற்றும் துப்பாக்கி குண்டுகள் ஊடுருவாத கவச உடைகளை அணிந்து கருப்பு நிற காரி ஒன்றில் இருந்தவாறு பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார்.

வெளிநாட்டு பயணிகள் அதிகம் கூடும் இடமான கிராகோவ் நகரில் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 2 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2 காவலர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என மொத்தம் 16 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட தாக்குதல்தாரி
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்திய நபரை துணிந்து எதிர்கொண்டனர்.
காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டு வீழ்த்திவிட்டு அவரும் மயங்கி விழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தாக்குதல்தாரியும், காவல்துறை அதிகாரியும் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல்தாரியின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 3 உடல்கள்
இந்த அசம்பாவிதத்தை தொடர்ந்து கிராகோவ் நகரில் இருந்து மேற்கே 160 கிலோமீட்டர் வடகிழக்கே Ostrowiec Swietokrzysk அமைந்துள்ள தாக்குதல்தாரியின் வீட்டை காவல்துறை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் என 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் மேலும் ஆபத்தான ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.