வாழை நாரில் நல்ல வருமானம் ஈட்டும் தமிழக விவசாயி: யார் இவர்?
50 ஏக்கரில் வாழை சாகுபடி செய்து வாழை நாரிலும் நல்ல லாபத்தை பெறும் விவசாயியை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
வாழை நார் தொழில்
தமிழக மாவட்டம், தஞ்சாவூர் அடுத்த திருவையாறு, திருப்பந்துருத்தி, வடுகக்குடி, மருவூர், நடுக்காவேரி உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்கின்றனர்.
அப்போது வாழை இலை, வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தார் போன்றவற்றின் சாகுபடி முடிந்தவுடன் வாழை நார் சாகுபடி செய்ய வாழை தோட்டத்தை கூலி தொழிலாளிகளுக்கு குத்தகைக்கு விடுகின்றனர். இதன் மூலம் விவசாயிகள் வருமானத்தை பெறுகின்றனர்.
யார் இந்த விவசாயி
தஞ்சாவூர் அடுத்த திருவையாறு அடுத்த வடுக குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மதியழகன். இவர், சுமார் 50 ஏக்கரில் வாழை சாகுபடி செய்கிறார்.
இதுகுறித்து விவசாயி கூறும்போது, "வமருவூர், சாத்தனூர் வடுகக்குடி உள்ளிட்ட 3 பகுதியிலும் நான் விவசாயம் செய்கிறேன். என் தோட்டத்தில் 30 பேர் நிரந்தரமாகவும், 20 பேர் அவ்வப்போதும் பணி செய்கின்றனர். திருவையாறு வாழைக்கு மதிப்பு இருப்பது போல வாழை நாருக்கும் உள்ளது.
மழை இல்லை என்றால் வாழை நார் பளபளப்பாகவும், கடின தன்மையுடனும், வெள்ளை நிறத்திலும் இருக்கும். வாழைத்தார், வாழை இலை அறுவடை முடிந்த பிறகு வாழை நார் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு விடுவேன்.
இங்கு, உற்பத்தியாகும் வாழை நார்களை தமிழகத்தில் பல பகுதிக்கு ஏற்றுமதி செய்கிறேன். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் லாபம் கிடைக்கும். சில நேரங்களில் ரூ. 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை கிடைக்கும்.
பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் அடுத்த 4 மாதங்களுக்கு பூக்கள் நல்ல விலைக்கு போகும். சில இடங்களில் ஆள்கள் பற்றாக்குறை காரணமாக வாழை நார் உற்பத்தி இல்லை. ஆனால், எங்கள் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதை நம்பி உள்ளதால், இந்த தொழில் ஏதுவாக உள்ளது" எனக் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |