ரூ.2 லட்சம் வரை Guarantee Free Loan.., உத்தரவாதம் இல்லாத விவசாயிகளுக்கான கடன் திட்டம்
அதிகரித்து வரும் பணவீக்கத்தில் இருந்து விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், உத்தரவாதமின்றி ரூ.2 லட்சம் வரை கடன் வழங்குவதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.
விவசாயக் கடன்
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறுஆய்வு குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதம் என்பதில் மாற்றமில்லை.
2222 நாட்கள் கொண்ட SBI Green Deposit FD திட்டம்.., ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
பணவீக்கம் மற்றும் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உத்தரவாதமில்லாத விவசாயக் கடனின் வரம்பை ரூ.1.6 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிறு, குறு விவசாயிகள் நிதி நிறுவனங்களில் கடன் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்" என்றார்.
கடந்த 2010-ம் ஆண்டில் விவசாயத் துறைக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடன் வழங்க ரூ.1 லட்சத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்தது. பின்னர், 2019-ம் ஆண்டில் கடன் வரம்பை 1.6 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |