2222 நாட்கள் கொண்ட SBI Green Deposit FD திட்டம்.., ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
பாரத ஸ்டேட் வங்கியில் 2222 நாட்கள் டெபாசிட் செய்ய கூடிய SBI Green Deposit FD திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
SBI Green Deposit FD
ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டங்கள் மற்ற FDகளைப் போலவே உத்தரவாதம் அளிக்கப்பட்ட ரிட்டர்ன் திட்டங்களாகும். ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கானவை.
பெரும்பாலும் பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கு நிலையான FDகள் வழங்குவதை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம். அதேபோல, FD முடிந்தவுடன் முதிர்வு பெறலாம்.
பசுமை முயற்சிகளுக்கு நிதியளிப்பதில் வங்கிக்கு ஆதரவாக வைப்புத்தொகையை திரட்டுவதற்காக SBI Green Rupee Term Deposit அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.1,000 ஆகும்.
இது, 1111 நாட்கள், 1777 நாட்கள் மற்றும் 2222 நாட்கள் கொண்ட சிறப்பு FD திட்டங்களைக் கொண்டுள்ளது.
இதில், பொது குடிமக்களுக்கு 1111 மற்றும் 1777 நாட்கள் கொண்ட FD -ல் 6.65 சதவீத வட்டி விகிதத்தையும், 2222 நாள் FD -யில் 6.40 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
அதேபோல, மூத்த குடிமக்களுக்கு 1111 மற்றும் 1777 நாட்கள் கொண்ட FD -ல் 7.15 சதவீத வட்டி விகிதத்தையும், 2222 நாள் FD -யில் 7.40 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
தற்போது நாம் 2222 நாட்கள் டெபாசிட் செய்ய கூடிய SBI Green FD திட்டத்தில் ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
ரூ.6 லட்சம் முதலீடு
* 2222 நாட்கள் கொண்ட SBI Green FD திட்டத்தில் பொதுகுடிமக்கள் ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.2,83,116.02 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.8,83,116.02 கிடைக்கும்.
* இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.3,37,578.99 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.9,37,578.99 கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |