அபுதாபி லொட்டரியில் ரூ.57 கோடி ஜாக்பாட் வென்ற மலையாளி
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வரும் கேரளாவை சேர்ந்த நபருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசுத்தொகை விழுந்துள்ளது.
ரூ.57 கோடி ஜாக்பாட்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருபவர் அரவிந்த் அப்புக்குட்டன். இவர், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே லொட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், தனது நண்பர்களுடன் இணைந்து அபுதாபி பிக் டிக்கெட் லொட்டரியை வாங்கியுள்ளார்.
இதையடுத்து, கடந்த மாதம் 22 -ம் திகதி நடைபெற்ற லொட்டரி குலுக்கலில் 447363 என்ற எண்ணிற்கு முதல் பரிசான 25 மில்லியன் திர்ஹம் விழுந்துள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.57 கோடி ஆகும்.
இந்த முதல் பரிசுத்தொகை அரவிந்த் அப்புக்குட்டனுக்கு விழுந்ததால் மகிழ்ச்சியின் எல்லைக்கே அவர் சென்றுள்ளார். இதுகுறித்து அரவிந்த் அப்புக்குட்டன் கூறுகையில், "இவ்வளவு பெரிய தொகை விழும் என்றே நினைக்கவில்லை.
இந்த பணத்தை எப்படி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யவில்லை. எனது நண்பர்கள் தான் எனக்கு போன் செய்து பரிசு விழுந்துள்ளது என்று கூறினார்கள். நான் அதனை முதலில் நம்பவில்லை. சிறிது பணத்தை செலவு செய்து மீதி பணத்தை சேமிக்கவுள்ளேன்" என்றார்.
கடை ஒன்றில் சேல்ஸ் எக்ஸியூட்டிவ் வேலைக்கு போன அரவிந்த் அப்புக்குட்டனுக்கு மிகப்பெரிய தொகை விழுந்துள்ளது என்று அவரது நண்பர்கள் கூறி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |