சர்வதேச சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பும் தென் இந்திய நகரம் - எது தெரியுமா?
தென் இந்திய நகரம் ஒன்று, சர்வதேச சுற்றுலாப்பயணிகள் அதிக வருகை தரும் வளர்ந்து வரும் இந்திய நகரமாக உருவெடுத்துள்ளது.
சர்வதேச சுற்றுலாப்பயணிகள்
கடந்த 2 ஆண்டுகளில் தங்குமிட முன்பதிவை வைத்து, சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிகளவில் விரும்பும் வளர்ந்து வரும் இந்திய நகரங்களுக்கான பட்டியலை Agoda நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வழக்கமாக இந்தியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், தாஜ்மஹால், கோவா கடற்கரை போன்ற இடங்களையே முதன்மையாக தேர்வு செய்வார்கள்.
திருவனந்தபுரம்
இதில், சர்வதேச சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பும் நகரங்களில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில், 33வது இடத்தில் இருந்த திருவனந்தபுரம், 11 இடங்கள் உயர்ந்து 22வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள அழகிய கடற்கரைகள், பசுமை நிறைந்த மலைப்பகுதிகள், ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய நல்வாழ்வு சிகிச்சைகள் இந்தியாவின் பணக்கார கோவிலான பத்மநாபசாமி கோயில் உட்பட நூற்றாண்டு பழமையான கோவில்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.
இதே போல் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் வளர்ந்து வரும் நகரமாக மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இந்தூர் முதலிடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டில் 35வது இடத்தில் இருந்த இந்தூர் 7 இடங்கள் முன்னேறி 28வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

இதே போல், இந்தியர்கள் அதிகளவில் செல்ல விரும்பும் நகரமாக கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மாட்டி முதலிடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டில் 47 வது இடத்திலிருந்த அல்மாட்டி, 12 இடங்கள் உயர்ந்து இந்த ஆண்டில் 35 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
வியட்நாமில் உள்ள சாபா, ஆசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஜப்பானின் ஒகயாமா , இந்தோனேசியாவின் பண்டுங், ஜப்பானின் மாட்சுயாமா மற்றும் தகாமாட்சு ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |