வினாடிக்கு 25,000 கி.மீ அதிவேக நட்சத்திரம் கண்டுபிடிப்பு - ஐன்ஸ்டீன் கோட்பாட்டை சோதிக்க வாய்ப்பு
Scientists found the world’s fastest star: வானியலாளர்கள் மிக வேகமான நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
Star S301
வானியலாளர்கள், Milkyway விண்மீன் மண்டலத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே அதிவேக நட்சத்திரத்தை (Star S301) கண்டறிந்துள்ளனர்.
இந்த நட்சத்திரம், நமது மில்கிவே விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள Sagittarius A* எனப்படும் மிகப்பெரிய கருந்துளையைச் சுற்றி, வினாடிக்கு 15,500 மைல்கள் (சுமார் 25,000 கி.மீ) வேகத்தில் பயணிக்கிறது.

ஒளியின் வேகத்தை விட...
இது ஒளியின் வேகத்தை விட 8 சதவீதம் அதிக வேகம் ஆகும்.
S301 நட்சத்திரம், வெறும் 8.7 ஆண்டுகளில் கருந்துளையைச் சுற்றி ஒரு முழு சுற்றை முடிக்கிறது. அதன் பாதை மிகவும் நீளமான elliptical orbit ஆகும். மிக அருகில் வரும் போது, அது கருந்துளைக்கு சுமார் 1.8 பில்லியன் கி.மீ நெருக்கமாக வருகிறது.
ஐன்ஸ்டீன் கோட்பாட்டை சோதிக்க வாய்ப்பு
இந்த கண்டுபிடிப்பு, ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பு கோட்பாட்டை (General Relativity) சோதிக்க ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக, “Frame Dragging” எனப்படும் நிகழ்வை, கால-விண்வெளி அமைப்பை இழுத்துச் செல்லும் விளைவுகளை ஆராய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
கண்டுபிடிப்பு விவரங்கள்:
- S301 நட்சத்திரம் சூரியனை விட 1.5 மடங்கு நிறை (mass) கொண்டது.
- சூரியனை விட 5 மடங்கு பிரகாசமானது.
- 2017 முதல் 2023 வரை சேகரிக்கப்பட்ட தரவுகள் மூலம், ESO-வின் GRAVITY கருவி பயன்படுத்தி கண்டறியப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள், இது முன்பு இரட்டை நட்சத்திர அமைப்பில் இருந்திருக்கலாம் என்றும், கருந்துளை அதை பிரித்து, S301-ஐ பிடித்துக்கொண்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.
அடுத்த முக்கியமான வாய்ப்பு 2031-ல் கிடைக்கும். அப்போது S301 மீண்டும் கருந்துளைக்கு மிக அருகில் வரும். ESO-வின் Extremely Large Telescope மூலம் அதன் இயக்கத்தை மிகத் துல்லியமாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு, கருந்துளையின் சுழற்சி வேகத்தை நேரடியாக அளவிடும் வாய்ப்பை வழங்குவதால், வானியலின் வரலாற்றில் மிகப் பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |