லண்டனில் நாய் தாக்குதலில் 42 வயதுடையவர் உயிரிழப்பு: பெண் உரிமையாளர் கைது
கிழக்கு லண்டனில் 42 வயது நபர் ஒருவர் கடுமையான நாய் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
கிழக்கு லண்டனில் சோகம்
பிரித்தானியாவின் கிழக்கு லண்டன் பகுதியில் புதன்கிழமை காலை நடந்த கொடூரமான சம்பவமான நாய் தாக்குதலில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நள்ளிரவு 4:53 மணிக்கு ஸ்ட்ராட்போர்டில்(Stratford) உள்ள ஷெர்லி சாலைக்கு(Shirley Road) மெட் பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காயமடைந்த நபரை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் துரதிஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
32 வயது நபர் கைது
இதில், தாக்குதலுடன் தொடர்புடைய 32 வயதான லீன் மெக்டோனல்(Leanne McDonnell) என்ற பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது நாய் வைத்திருப்பதில் அலட்சியம், நாயின் நலனைக் கவனிக்காதது, சண்டைக்கான நாய் வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், கடந்த நவம்பர் 18-ம் திகதி நடந்த தனி சம்பவத்துடன் தொடர்புடைய 3 நாய் தாக்குதல் குற்றச்சாட்டுகளும் அவரது மீது உள்ளன.
இந்த இரண்டு சம்பவங்களிலும் தொடர்புடைய நாய் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லீன் மெக்டோனல் வெள்ளிக்கிழமை பார்க்கிங்சைட்(Barkingside) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |