ஸ்டான்லியில் நடந்த பயங்கர துப்பாக்கி சூடு: ஒருவர் பலி! பொலிஸார் விசாரணை
பிரித்தானியாவில் நடந்த திடீர் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி சூடு
கவுண்டி டர்ஹாமில் உள்ள ஸ்டான்லி(Stanley) பகுதியில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சனிக்கிழமை மாலை சுமார் 5:20 மணியளவில் எல்ம் தெருவில்(Elm Street) உள்ள இல்லத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு டர்ஹாம் காவல்துறை விரைந்தது.
சம்பவ இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அவசர உதவிக்குழுவினரின் உடனடி முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட தகவல்
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பாக பயிற்சி பெற்ற அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
தற்போது, சிறப்பு தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |