ஆஸ்திரியாவில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்: 14 வயது சிறுவன் உயிரிழப்பு
ஆஸ்திரியாவில் நடந்த பயங்கர கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
கத்திக்குத்து தாக்குதல்
ஆஸ்திரியாவின் வில்லாச் நகரில் நடந்த அதிர்ச்சிகரமான தாக்குதலில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார் மற்றும் ஐந்து ஆண்கள் காயமடைந்துள்ளனர்.
சனிக்கிழமை பிற்பகல், 23 வயது இளைஞர் தெற்கு ஆஸ்திரிய நகரத்தில் ஆறு வழிப்போக்கர்களை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார்.
இதில் துரதிர்ஷ்டவசமாக, 14 வயது சிறுவன் காயங்களின் காரணமாக உயிரிழந்தார்.
உணவு டெலிவரி சாரதியின் துரித செயல்
சம்பவத்தை நேரில் கண்ட உணவு டெலிவரி சாரதியின் துரித செயலால் தாக்குதல் விரைவில் முடிவுக்கு வந்தது.
சாரதி தனது வாகனத்தை வேண்டுமென்றே தாக்குபவர் மீது மோதி, தாக்குதலை திறம்பட தடுத்து நிறுத்தினார்.
காவல் துறை செய்தித் தொடர்பாளர் Rainer Dionisio டிரைவரின் செயலைப் உணவு டெலிவரி சாரதியின் துரித செயலை பாராட்டினார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 14 முதல் 32 வரை கொண்ட ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தாக்குதலாளரைத் தெரியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆஸ்திரியாவில் சட்டப்பூர்வ குடியுரிமை கொண்ட சிரியா நாட்டைச் சேர்ந்தவர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |