மூன்று மகன்களை நிற்க வைத்து சுட்டுக்கொன்ற தந்தை: நாட்டை உலுக்கிய கொடூர சம்பவம்
அமெரிக்காவில் நபர் ஒருவர் தனது 3 மகன்களையும் வரிசையாக நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர கொலை
ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் சாட் டோர்மேன் (32). தனது மனைவி, மகள் மற்றும் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சாட் திடீரென ஒரு கொடூர செயலை துப்பாக்கி மூலம் செய்ய முனைந்தார்.
தனது மூன்று மகன்களையும் வரிசையாக நிற்க வைத்து, அவர்களை துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதில் இரண்டு பிள்ளைகள் உயிரிழக்க, மற்றொரு மகன் பயத்தில் அலறியடித்து ஓடியுள்ளனான்.
Liz Dufour/The Enquirer
ஆனால், சாட் ஈவு இரக்கமின்றி அவனையும் இழுத்து பிடித்து வந்து கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளார்.
உயிர் பிழைத்த சிறுமி
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்டின் மனைவி தடுக்க முயன்றபோது காயமுற்றார். இதற்கிடையில் மகள் மட்டும் அங்கிருந்து வெளியேறி உயிர் பிழைத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து சாட் டோர்மேனை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவரது மனைவி மற்றும் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், டோர்மேன் பல மாதங்களாக இந்த கொடூர செயலை திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது அதனை நிகழ்த்திவிட்டதாகவும் ஒப்புக்கொண்டதாகவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதற்காக இந்த கொலைகளை அவர் செய்தார் என்பது குறித்த காரணம் இன்னும் வெளியாகவில்லை.
WLWT
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |