தன் தாயைக் காக்க போராடியபோது கொல்லப்பட்ட சிறுமி: கொலையாளி தொடர்பில் திடுக் தகவல்
அயர்லாந்து நாட்டில், தான் தாய் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்ற எட்டு வயது சிறுமியும் கொல்லப்பட்ட பயங்கரம் நிகழ்ந்தது.
தாயைக் காக்க போராடிய சிறுமி
ஞாயிறன்று, அயர்லாந்திலுள்ள Co Wexford என்னுமிடத்தில் தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்த Malika Al Kattib (8)என்னும் சிறுமி, தங்கள் வீட்டு மாடியிலுள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறாள்.
Credit: 2024 PA Media, All Rights Reserved
இரவு 11.45 மணியளவில் கீழே ஏதோ பயங்கர சத்தம் கேட்பதை அறிந்த Malika கீழே இறங்கிவர, தன் தாயான Aisha Al Katib(31) கத்தியால் குத்தப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளாள்.
உடனே தாயைக் காப்பாற்ற Malika குறுக்கே புகுந்த நிலையில், அவளுக்கும் குத்து விழுந்தது.
தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். ஆனால், சிறிது நேரத்தில் Malika உயிரிழந்துவிட்டாள்.
Credit: Family Handout/PA Wire
அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பில் தனது 30 வயதுகளிலிருக்கும் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நேற்று செய்தி வெளியானது.
கொலையாளி தொடர்பில் திடுக் தகவல்
Credit: 2024 PA Media, All Rights Reserved
இந்நிலையில், Malikaவையும் அவளது தாயையும் கத்தியால் குத்தியது, அவளது தந்தையான Mohammad Shakir (34)தான் என்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட Mohammad நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
Credit: 2024 PA Media, All Rights Reserved
அவர் மீது, Malikaவை கொலை செய்தது, மற்றும் அவளது தாயான Aishaவை கொலை செய்ய முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |