மகளின் திருமணத்தில் மாரடைப்பால் உயிரிழந்த தந்தை
மகளின் திருமணம் முடிந்ததும் சடங்குகள் செய்யும்போது மாரடைப்பால் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை உயிரிழப்பு
இந்திய மாநிலமான தெலங்கானா, கம்மாரெட்டி மாவட்டத்தின் பிகானர் பகுதியில் உள்ள ராமேஷ்வர்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசந்திரம் (56).
இவருடைய மூத்த மகளின் திருமணம் பிக்கனரில் ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், திருமண சடங்கின் ஒரு பகுதியாக கன்னியாதானம் சடங்கு செய்யப்பட்டது.
அப்போது, தனது மகளின் கால்களை பாலசந்திரம் கழுவினார். அதன்பின்னர் அவர் மாரடைப்பால் கீழே சரிந்து விழுந்தார்.
பின்னர், அவரை அவரது குடும்ப உறுப்பினர்கள் கம்மாரெட்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.
இச்சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதில், புதுமண தம்பதிகளின் நிலையை கருத்தில் கொண்டு திருமண சடங்குகள் செய்து முடிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |