இளம்பெண் கொலை! பெற்ற மகனை ஆதாரத்துடன் போலீசில் மாட்டிவிட்ட தந்தை
இந்தியாவில் இளம்பெண்ணை கொன்ற வழக்கில தனது மகனுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி அவரது தந்தையே போலீசில் மாட்டிவிட்ட சம்பவம் நடந்துள்ளது.
மும்பையின் மிஸ்குய்ட்டா பகுதியை சேர்ந்தவர் கேரல்(வயது 29), கடந்த மாதம் 24ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை.
எங்கு தேடியும் கேரல் கிடைக்காததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர், இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கேரலை தேடி வந்ததில், கடந்த 3ம் திகதி பல்கார் நகரில் உள்ள புதர் ஒன்றில் சடலமாக இருந்ததை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து நடந்த பிரேதப் பரிசோதனையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக கேரலின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ் அப் தகவல்களை ஆய்வு செய்ததில் கடைசியாக ஜீக்கோ(வயது 27) என்பவருடன் இருந்தது தெரியவந்தது.
அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர், இதற்கிடையே தன்னுடைய வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஜீக்கோவின் தந்தை அன்சேம் ஆராய்ந்துள்ளார்.
அப்போது, சம்பவ தினத்தன்று ஜீக்கோ பைக்கில் வெளியே சென்றது தெரியவந்தது, இதனையடுத்து ஜீக்கோவின் மடிக்கணனியை எடுத்து சோதனை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
உடனடியாக போலீசுக்கு போன் செய்த ஜீக்கோவின் தந்தை, தன் மகன் தான் குற்றவாளி என்றும், ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஜீக்கோவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், கேரலை காதலித்து வந்ததும், திருமணம் செய்து கொள்ளுமாறு அதிக அழுத்தம் கொடுத்த காரணத்தால் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.
தன் மகன் தான் குற்றவாளி என்று தெரிந்ததும், தந்தையே போலீசில் மாட்டிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.