மருமகளுக்கு கோலாகலமாக மறுமணம் செய்துவைத்த மாமனார்! ஆனந்த கண்ணீருடன் வழியனுப்பிய வீடியோ வைரல்
இந்திய மாநிலம் குஜராத்தில், தனது மருமகளுக்கு மாமனார் மறுமணம் செய்து வைத்து வழியனுப்பி வைத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பால் உயிரிழந்த கணவர்
குஜராத் மாநிலம் அம்பாஜியைச் சேர்ந்தவர் சித்திராஜ். இவர் கடந்த தீபாவளி அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது மனைவி 6 மாத குழந்தையுடன் தவிப்பதைப் பார்த்து வருத்தப்பட்ட மாமனார் பிரவீன் சிங் ராணா, அவருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர நினைத்துள்ளார்.
அதன்படி அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், தனது மருமகளுக்கும் ராணா மறுமணம் செய்து வைத்துள்ளார்.
கோலாகலமாக திருமணம்
அவருக்கு தந்தையைப் போல் முன்னின்று உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணத்தை நடத்தியுள்ளார்.
திருமணம் முடிந்தவுடன் மருமகளை கட்டியணைத்து ஆனந்த கண்ணீருடன் ராணா வழி அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வு அப்பகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |