என் 3 பெண் குழந்தைகளையும் கொன்றுவிட்டேன்! பிரான்சில் பொலிஸாரை அதிரவைத்த நபர்
பிரான்சில் நபர் ஒருவர் தனது மூன்று மகள்களையும் கொன்றுவிட்டதாக கூறி சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மூன்று மகள்கள் கொலை
பாரிஸின் தென்கிழக்கு புறநகர் பகுதியான அல்ஃபோர்ட்வில்லி நகரைச் சேர்ந்த 41 வயதுநபர் ஒருவர், தனது மூன்று பெண் குழந்தைகளை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து அவர் வடக்கு கடற்கரை நகரமான டிப்பேயில் (Dieppe) உள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு என் மூன்று மகள்களையும் கொலை செய்துவிட்டேன் என்று கூறி பொலிசாரை அதிர வைத்துள்ளார்.
AFP
குடும்ப வன்முறை தண்டனை பெற்றார்
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 4, 10 மற்றும் 11 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் உடல்களை பொலிஸார் மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு வழக்கறிஞர் மூன்று குழந்தைகளின் இறப்பை உறுதிப்படுத்தினார். அத்துடன் குறித்த நபர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
கொலையாளி ஏற்கனவே 2021ஆம் ஆண்டில் குடும்ப வன்முறை தண்டனை பெற்றார் என்று வழக்குக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |