ஆண் குழந்தை பிறக்காததால் இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தை
தனக்கு ஆண் குழந்தை பிறக்காததால் இரட்டை பெண் குழந்தைகளை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொலை செய்த தந்தை
இந்திய மாநிலமான ராஜஸ்தான் சிகாரைச் சேர்ந்த தம்பதியினர் அசோக் யாதவ் மற்றும் அனிதா. இவர்களுக்கு ஏற்கனவே 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. ஆனால், அசோக் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆண் குழந்தையை விரும்பியுள்ளனர்.
இதனால் கணவன் மற்றும் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்தவகையில், நேற்று நடைபெற்ற சண்டையில் மனைவியை கணவர் தாக்கியுள்ளார்.
மேலும், இரட்டை பெண் குழந்தையையும் தரையில் தூக்கி வீசியுள்ளார். இதையடுத்து, காயமடைந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். பின்னர், இரு குழந்தைகளையும் தாங்களாகவே அடக்கம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் தாய் மாமா, காவல் துறையில் புகார் அளித்தார். அதன்படி, அடக்கம் செய்த குழந்தைகளை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தையின் தந்தையை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |