என் மகன் நல்லவர், நேர்மையானவர்: மக்களவையில் அத்துமீறி நுழைந்த இளைஞரின் தந்தை பேட்டி
இந்திய மக்களவையில் அத்துமீறி நுழைந்த மாணவரின் தந்தை, என் மகன் நல்லவர் என்று பேட்டி அளித்துள்ளார்.
மக்களவையில் அத்துமீறிய இளைஞர்கள்
மக்களவையில் அத்துமீறி நுழைந்த இருவரை பிடித்து எம்.பிக்கள் அவைக்காவலரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், முழக்கங்களை எழுப்பி மேஜையில் ஏறி தப்பிக்க முயன்ற போது எம்.பிக்களே அவர்களை பிடித்தனர்.
அவர்கள் மக்களவையில் புகைக்குண்டுகளை திறந்ததால் மஞ்சள் நிறத்தில் புகை பரவியது. இதனால், மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சில உறுப்பினர்கள் அச்சத்துடன் ஓடினர்.
இதனிடையே, மக்களவையின் உள்ளே நுழைந்த ஆண்களுக்கு ஆதரவாக வெளியே இரண்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் கைது செய்தனர். இந்த இரு பெண்களின் பெயர் நீலம் மற்றும் அன்மோல்ஷிண்டே என்ற தகவல் வந்துள்ளது. மேலும், அவர்கள் ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மக்களவையில் நுழைந்த ஒருவரது பெயர் சாகர் ஷர்மா எனவும், மற்றொருவர் பெயர் மனோரஞ்சன் என்பதும் தெரியவந்துள்ளது.
மாணவரின் தந்தை பேட்டி
இந்நிலையில், மனோ ரஞ்சன் என்பவரின் தந்தை தேவராஜ் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், "என் மகன் நல்லவர், நேர்மையானவர், சமூக பணியில் ஆர்வம் கொண்டவர், சமூதாய நலனுக்காக தன்னை தியாகம் செய்பவர்.
சுவாமி விவேகானந்தர் புத்தகங்களை படித்ததால் இந்த மனநிலை வந்ததா என தெரியவில்லை. நாங்கள் பிரதாப் சிம்ஹாவின் தொகுதியில் வசிக்கிறோம். என் மகனை நான் கண்டிக்கிறேன். எனது மகன் ஒருசிலரால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்" எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |