11 நாட்களாக தேடி..வெறும் கையாலேயே தோண்டி மகளின் உடலை கண்டுபிடித்த தந்தை
வெனிசுலாவில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கிய மகளை 11 நாட்களுக்கு பின் நபர் ஒருவர் கண்டுபிடித்தார்.
பலி எண்ணிக்கை 3,535 ஆக
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 16,700 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் காணாமல் போன பலரது விவரங்கள் குறித்து எதுவும் இதுவரை தெரியவரவில்லை; இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை.
இந்த நிலையில், நிலநடுக்க மீட்புப் பணிகள் முடிவுக்கு வரும் நிலையில் உயிரிழந்த தங்கள் உறவினர்களின் உடல்களை மீட்கும் பொறுப்பு வெனிசுலா மக்களின் கைகளிலேயே விடப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கிய தனது 12 மகளை 11 நாட்களாக தேடியுள்ளார். அவருக்கு மீட்புக்குழுவினரின் உதவியும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தனது கைகளாலேயே தோண்டி
ஒருவழியாக தானே களத்தில் இறங்கியுள்ளார். தனது கைகளாலேயே தோண்டி அவர் தனது மகளை இறந்த நிலையில் கண்டுபிடித்துள்ளார்.
அதேபோல், நோயல் மார்க்வெஸ் என்ற இளைஞர் தனது சகோதரரை மீட்கப் போராடினார். ரம்பத்தையும், வெறும் கைகளையும் பயன்படுத்தி மீட்புப்பணியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து பேசிய அவர், "இது நியாயமற்றது. நடக்கும் அனைத்தும் மனிதாபிமானமற்றவை. அரசிடம் இருந்து எங்களுக்கு எந்தப் பதிலும் வராததால் என் சகோதரனை எங்களால் வெளியே கொண்டுவர முடியவில்லை. 11 நாட்களுக்குப் பிறகும், நாங்கள் இன்னும் ஒரு கிரேனைக் கோரிக்கொண்டிருக்கிறோம்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |