மகன் எடுத்த தவறான முடிவு... காப்பாற்றச் சென்ற தந்தையும் பலியான சோகம்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், இளைஞர் ஒருவர் கோபத்தில் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள முடிவு செய்த நிலையில், அவரைக் காப்பாற்றச் சென்ற தந்தையும் உயிரிழந்த சோகம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
மகன் எடுத்த தவறான முடிவு...
உத்தரப்பிரதேசத்திலுள்ள உத்யோக் நகர் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஷ்ரவன் ஜெய்ஷ்வால் (55). அவரது மகன், ராகேஷ் ஜெய்ஷ்வால் (24).
நேற்று இரவு 11.00 மணியளவில் இருவரும் மோட்டார் சைக்கிளில் சந்தைக்குச் சென்றுள்ளனர்.

இருவருக்கும் ஏதோ வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. கோபத்தில் ராகேஷ் ரயில் பாதையை நோக்கி மோட்டார் சைக்கிளைக் கொண்டு சென்றுள்ளார்.
ரயில் பாதையோரமாக நின்றபடி தந்தையும் மகனும் வாக்குவாதத்தைத் தொடர, கோபத்தில் சட்டென ரயில் பாதையின் நடுவில் போய் நின்றுள்ளார் ராகேஷ்.
வேகமாக ரயில் ஒன்று வந்துகொண்டிருக்க, மகனைக் காப்பாற்றுவதற்காக ஓடிய ஷ்ரவன், ரயில் பாதையின் நடுவில் நின்ற மகனைப் பிடித்து வெளியே இழுக்க முயன்றுள்ளார்.
ஆனால், அதற்குள், வேகமாக வந்த ரயில் இருவரும் மீதும் மோத, இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்கள்.
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |