கடனை திருப்பிக் கொடுக்காததால் தாயின் கண்முன்னே சிறுமியை சீரழிக்க வந்த தந்தை-மகன்! பரபரப்பு சம்பவம்
இந்தியாவில் கடனை திருப்பிக் கொடுக்காததால் தந்தை - மகன் இருவரும் 16 வயது சிறுமியை தாயின் கண் முன்னே துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது.
இந்திய மாநிலம் பஞ்சாபில், லூதியானா பகுதியில் வசிக்கும் 39 வயது பெண், கடந்த சில மாதங்களுக்கு முன் 45 வயது மிக்க தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரிடம் அவசர தேவைக்காக ரூ. 10,000 கடன் வாங்கியுள்ளார்.
சில மாதங்கள் ஆகியும் அதனை திருப்பி கொடுக்கமுடியாமல் அவதிப்பட்டுள்ளார். இந்தநிலையில், பணத்தை திருப்பி கேட்டு மிரட்டி வந்த அந்த நபர், கடந்த திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் தனது 22 மகனுடன் பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் கணவன் வெளியே சென்றிருக்க, தனது 16 வயது மக்களுடன் அப்பெண் தனியாக இருந்துள்ளார்.
அப்போது தந்தை மகன் இருவரும் சிறுமியை தாயின் கண்முன்னே பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
தடுக்க முயன்ற அப்பெண்ணை கட்டையால் அடித்து தள்ளிவிட்டுள்ளனர். மகளைக் காப்பாற்ற என்ன செய்வதென்று தெரியாமல் திணறிய அப்பெண், கத்தி கூச்சலிட்டுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு உள்ளூர்வாசிகள் வீட்டின் வெளியே கூடியுள்ளனர். இதையடுத்து, தந்தை-மகன் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாராயக் கடத்தல் தொழில் செய்வதாக கூறப்படுகிறது.
நடந்த சம்பவம் குறித்து அப்பெண் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அனால், இரண்டு நாட்களாக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய பாதிக்கப்பட்ட பெண், இன்று கமிஷனர் ராகேஷ் அகர்வாலை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.
கமிஷனர், தனது எழுத்துப்பூர்வ புகாரைப் பெற்ற பின்னர், கூடுதல் துணை பொலிஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஆள் நடமாட்டம் இருக்கும் நேரத்தில், தந்தை-மகன் இருவரும் சேர்ந்து 16 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது