15 வயது வளர்ப்பு மகளிடம் மோசமாக நடந்த கொண்ட தந்தை! குட்டு வெளியானதால் வேறு நாட்டுக்கு தப்பியோட்டம்.. சிக்கியது எப்படி?
அமெரிக்காவை சேர்ந்த நபர் தனது வளர்ப்பு மகளை 5 மாதங்கள் சீரழித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஹாண்ட் போர்டை லினோ (36). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தனது 15 வயது வளர்ப்பு மகளை 5 மாதங்களுக்கு சீரழித்துள்ளார்.
இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டி வந்திருக்கிறார்.
ஆனால் லினோவின் செயலை குடும்பத்தார் கண்டுபிடித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் நாட்டை விட்டே தப்பிய லினோ Bolivia நாட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் கடந்தாண்டு இறுதியில் அமெரிக்காவுக்கு திரும்பிய லினோவை பொலிசார் கைது செய்தனர்.
தற்போது அவர் கிங்ஸ் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அவரின் ஜாமீன் தொகையாக $325,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
