மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற மெக்சிகோ நாட்டுப் பெண்: எழுந்த சர்ச்சை
2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் அழகிப்போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் அழகிப்பட்டம் பெற்றுள்ளார்.
மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்

மெக்சிகோவைச் சேர்ந்தவரான ஃபாத்திமா (Fatima Bosch, 25) என்னும் இளம்பெண் 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விடயம் என்னவென்றால், ஃபாத்திமா தொடர்பில் ஒரு பெரும் சர்ச்சை நிகழ்ந்த நிலையில், அவர் அழகிப்பட்டம் வென்றுள்ள விடயம் பேசுபொருளாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன், அழகிப்போட்டி இயக்குநர்களில் ஒருவரும் தாய்லாந்து நாட்டவருமான நவாத் (Nawat Itsaragrisil) என்பவருக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஒன்று நடந்தது.
அதைத் தொடர்ந்து மோசமான ஒரு வார்த்தையால் நவாத் ஃபாத்திமாவை திட்டியதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகள் நேரலையில் வெளியாக, பெண் என்னும் முறையில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார் ஃபாத்திமா.
அவருக்கு ஆதரவாக மற்ற நாடுகளைச் சேர்ந்த இளம்பெண்களும் வெளிநடப்பு செய்ய, பெரும் பரபரப்பு உருவானது.
அதைத்தொடர்ந்து மெக்சிகோ ஜனாதிபதியான கிளாடியா (Claudia Sheinbaum) ஃபாத்திமாவின் துணிச்சலைப் பாராட்ட, ஃபாத்திமாவின் செயல் உலகின் கவனம் ஈர்த்தது.
நவாத் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆக, இவ்வளவு சர்ச்சைக்கும் பிறகு ஃபாத்திமா 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட, இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |