அப்பாவின் திடீர் மரணம்..உலகக்கோப்பையில் இருந்து பாதியில் வெளியேறிய கேப்டன்
மகளிர் பாகிஸ்தான் அணித்தலைவர் பாத்திமா சனா தந்தையின் மரணத்தால் உலகக்கோப்பையில் இருந்து பாதியில் வெளியேறினார்.
பாத்திமா சனா
ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதுவரை நடந்த போட்டிகளில் அவுஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா 2 வெற்றிகள் பெற்றுள்ளன.
பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. இன்று நடைபெற உள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.
தந்தையின் மரணம்
இந்நிலையில் பாகிஸ்தான் அணித்தலைவர் பாத்திமா சனா (Fatima Sana) தனது நாட்டிற்கு திரும்பியுள்ளார். பாத்திமாவின் தந்தை காலமானதால், அவரது இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக தொடரில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.
இதன் காரணமாக இன்றையப் போட்டியில் சனா விளையாட மாட்டார் என PCB அறிவித்தது. மேலும் அவருக்கு பதிலாக முனிபா அலி அணியை வழிநடத்துவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதே தவறுகளை செய்தோம்! அவர்களும் பொறுப்பேற்க வேண்டும் - இந்திய அணியிடம் படுதோல்வி குறித்து பேசிய கேப்டன்
திறமையான ஆல்ரவுண்டர் வீராங்கனையான பாத்திமா சனா விளையாடாதது அணிக்கு பெரும் பின்னடைவாகியுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |