இங்கிலாந்தை நொறுக்கிய பாத்திமா சனா! மகளிர் உலகக்கிண்ணத்தில் மிரட்டல் பந்துவீச்சு
மகளிர் உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தானின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
கிளீன் போல்டு
கொழும்பில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மகளிர் உலகக்கிண்ணப் போட்டி நடந்து வருகிறது.
𝐅𝐚𝐭𝐢𝐦𝐚 𝐒𝐚𝐧𝐚 𝐨𝐧 𝐟𝐢𝐫𝐞! 🔥
— Female Cricket (@imfemalecricket) October 15, 2025
Nat Sciver-Brunt chops on, Heather Knight trapped lbw — England 39/4 (6.4)! 👀#CricketTwitter #CWC25 #PAKvENG pic.twitter.com/Y1kgI8lAW9
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தெரிவு செய்ய இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. டயானா பெய்க்கின் பந்துவீச்சில் டாமி பியூமான்ட் போல்டானார்.
அடுத்து பாத்திமா சனாவின் ஓவரில் ஏமி ஜோன்ஸ் (8) கிளீன் போல்டானார். பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் நட் சிவர்-ப்ரண்ட் 4 ஓட்டங்களில் இருந்தபோது, சனாவின் 7வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தெறிக்கவிட்ட பாத்திமா சனா
இந்த அதிர்ச்சியில் இருந்து இங்கிலாந்து அணி மீள்வதற்குள் அதே ஓவரில் 18 ஓட்டங்களில் இருந்த ஹீதர் நைட் lbw ஆகி பெவிலியன் திரும்பினார்.
அதனைத் தொடர்ந்து வந்த வீராங்கனைகளும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட, இங்கிலாந்து அணி 25 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 79 ஓட்டங்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக தடைபட்டுள்ளது.
மிரட்டலாக பந்துவீசிய பாகிஸ்தான் அணித்தலைவர் பாத்திமா சனா (Fatima Sana) 19 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |