இந்தியர் தலைக்கு 9 கோடி வெகுமதி: FBI வெளியிட்ட டாப் 10 குற்றவாளிகள் பட்டியல்
அமெரிக்காவால் தீவிரமாக தேடப்படும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்தியர் குறித்த தகவலுக்கு ரூ 9 கோடி பரிசு தொகையை FBI வெளியிட்டுள்ளது.
இந்தியர் தலைக்கு 9 கோடி வெகுமதி
அமெரிக்காவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மனைவியை கொடூரமாக கொன்ற இந்தியர் பத்ரேஷ் குமாருக்கு அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI வெகுமதி அறிவித்துள்ளது.
FBI அமைப்பினரால் தீவிரமாக தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் டாப் 10 இடங்களுக்குள் வரும் பத்ரேஷ் குமார் குறித்த தகவலுக்கு 2,50,000 டொலர்கள் வெகுமதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பத்ரேஷ் குமாரின் இருப்பிடம் குறித்த தகவலுக்கு கூடுதலாக 1 மில்லியன் டொலர்(ரூ.9.18 கோடி) வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியை கொன்ற இந்தியர்
கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி மேரிலாந்தின் ஹனோவரியில் உள்ள டோனட்ஸ் ஹோட்டல் ஒன்றில் பத்ரேஷ் குமாரும் அவரது மனைவியும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மனைவியை கொன்றுவிட்டு அங்கிருந்து பத்ரேஷ் குமார் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த கொலை வழக்கு சம்பந்தமாக FBI அதிகாரிகளிடம் 300க்கும் அதிகமான ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளி பத்ரேஷ் குமாரை கைது செய்ய முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |