தலைமறைவாக உள்ள சதிந்தர்ஜித் சிங்: 50000 டொலர் பரிசு தொகை அறிவித்த FBI
சஜிந்தர்ஜித் சிங் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று FBI அறிவித்துள்ளது.
50000 டொலர் பரிசு தொகை அறிவித்த FBI
தலைமறைவாக உள்ள தேடப்பட்டு வரும் சதிந்தர்ஜித் சிங்(Satinderjeet Singh) என்ற கோல்டி பிராரைப் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சுமார் 50,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI தகவல் அளித்துள்ளது.
லாரன்ஸ் பிஷ்னோய் வழிநடத்தும் சர்வதேச சட்டவிரோத கும்பலின் முக்கிய நபராக கருதப்படும் சதிந்தர்ஜித் சிங், பல்வேறு குற்ற சம்பவங்களில் பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.
அமெரிக்காவில் ICE அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூடு: மெக்சிகோவை சேர்ந்தவர் உயிரிழப்பு: பெரும் சர்ச்சை
சதிந்தர்ஜித் சிங் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல இடங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சதிந்தர்ஜித் சிங்கை கைது செய்ய கடந்த ஜூலை 1ம் திகதி 2026ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
தலைமறைவாக உள்ள சதிந்தர்ஜித் சிங் சர்வதேச அளவில் பல நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாக FBI தகவல் தெரிவித்துள்ளது.
The #FBI is offering a reward of up to $50,000 for information leading to the arrest of Satinderjeet Singh, #wanted for his alleged involvement in the Lawrence Bishnoi Organized Crime Group which is allegedly engaged in a variety of violent acts in Southern California, and across… pic.twitter.com/BdCxmELUKv
— FBI Most Wanted (@FBIMostWanted) July 7, 2026
குறிப்பாக சாக்ரமெண்டோ மற்றும் ப்ரெஸ்னோ ஆகிய பகுதிகளில் வலுவான தொடர்புகள் இருப்பதாகவும், இந்தியா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் அவருக்கு தொடர்புகள் இருப்பதாக FBI தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சதிந்தர்ஜித் சிங்கின் இருப்பிடம் மற்றும் அவர் ஈடுபடும் குற்ற சம்பவங்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு FBI கேட்டுக் கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |